அடேங்கப்பா.. காட்டில் குவிந்த கோடிக்கணக்கான மின்மினிப்பூச்சிகள்.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | May 09, 2022 11:49 AM

ஆனைமலை காட்டுப் பகுதியில் கோடிக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் ஒரே நேரத்தில் இணைந்து காட்டையே ஒளிரச் செய்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Fireflies Lighting Dance in Anaimalai Forest

Also Read | அடுத்தடுத்து சிக்ஸர்.. பொளந்துகட்டிய தினேஷ் கார்த்திக்.. பெவிலியனுக்குள்ள வந்ததும் கோலி செஞ்ச மரியாதை.. வைரலாகும் வீடியோ..!

மின்மினிப்பூச்சிகள், விளக்குப் பூச்சிகள் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த வினோத ஒளிரும் பூச்சிகள் வெளிர், மஞ்சள் இளஞ்சிவப்பு கலந்த பச்சை மற்றும் சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களில் ஒளியை வெளியிடக் கூடியவை. இவற்றின் உடலில் ஒருவித வேதிவினை நடைபெறுவதால் இவற்றின் பின்பகுதியில் இருந்து வெளிச்சம் ஏற்படுகிறது. பெரும்பாலும் தங்களது இரை மற்றும் துணையை கவரவும் எதிரிகளை எச்சரிக்கவும் இப்படி ஒளியை இப்பூச்சிகள் வெளியிடுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஈரப்பதம் நிறைந்த வெப்ப மண்டல பிரதேசங்களில் வாழும் இந்த மின்மினி பூச்சிகள் பெரும்பாலும் வனங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

Fireflies Lighting Dance in Anaimalai Forest

ஆனைமலை

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சில தினங்களுக்கு முன்பாக மின்மினிப்பூச்சிகள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து காட்டையே ஜொலிக்க வைத்திருக்கின்றன. இதனை மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த வகையில் ஆனை மலை வனப்பகுதியில் 1999 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இதேபோல மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனம் நடந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சில தினங்களுக்கு முன்னர் கோடிக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் ஒரே நேரத்தில் ஒளிர்ந்த இந்த அரிய நிகழ்வை ஸ்ரீ ராம் முரளி என்பவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

வனப்பகுதியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கு அடையாளமாகவே இந்த மின்மினிப் பூச்சிகளின் நடனம் நடைபெற்றிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Fireflies Lighting Dance in Anaimalai Forest

என்ன காரணம்?

மின்மினி பூச்சிகளின் உடலில் உள்ள லூசிபெரினுடன் ஆக்சிஜன் இணைவதால் நடைபெறும் வேதிவினையின் காரணமாக, இத்தகைய ஒளி உருவாகிறது என்கிறார்கள் நிபுணர்கள். ஆனைமலை பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த அரிய காட்சி தோன்றுவது வழக்கம். இணையை கவர, பிரகாசமான ஒளியை இந்த பூச்சிகள் வெளியிட்ட நிகழ்வு பலரையும் கவர்ந்திருக்கிறது.

Fireflies Lighting Dance in Anaimalai Forest

இந்நிலையில் இரவை பகலாக மாற்றிய மின்மினிப் பூச்சிகளின் ஒத்திசைவு நடனத்தின்போது ஸ்ரீராம் முரளி என்னும் கலைஞர் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #FIREFLIES #FIREFLIES LIGHTING DANCE #ANAIMALAI FOREST #மின்மினிப்பூச்சிகள் #ஆனைமலை

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fireflies Lighting Dance in Anaimalai Forest | Tamil Nadu News.