'வண்டி டோக்கன் போடுற வேலைக்கு ஆள் எடுக்குறாங்க...' மேக்ஸிமம் அப்ளை பண்ணினது யாரு தெரியுமா...?' கவலையளிக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் பார்கிங் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வாகன கண்காணிப்பு பணிகளுக்கு சுமார் 70% பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் ஸ்மார்ட் பார்கிங் திட்டத்தை செயல்படுத்த தனியார் கம்பெனியிடம் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இருச்சக்கர வாகனத்தை நிறுத்த 1 மணி நேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த 1 மணி நேரத்திற்கு 20 ரூபாய்க்கும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தி.நகர், அண்ணா சாலை, புரசைவாக்கம், மெரினா, வாலாஜா சாலை உள்ளிட்ட 15 இடங்களில் தற்போது ஒவ்வொரு இடமாக ஸ்மார்ட் பார்கிங் திட்டத்தை தொடங்கி வருகிறது, முதற்கட்டமாக தி.நகர் மற்றும் அண்ணா நகரில் செயல்படுத்த திட்டமிட்ட தனியார் நிறுவனம் பார்கிங் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்காலம் என விளம்பரம் செய்திருந்தது.
இதில் ஐம்பது பார்கிங் கண்காணிப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணிகளுக்கு சுமார் 1400 நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர், அதில் சுமார் 70 சதவீத நபர்கள் படித்த பட்டதாரிகள் ஆவார்கள். அதிலும், 50 சதவீதம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது கூடுதல் கவலையளிக்கும் தகவலாக உள்ளது. தான் படித்தது சம்பந்தமான வேலை கிடைக்காமல், எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, கிடைத்தால் போதும் என பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் காத்துக் கிடப்பது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
