'மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வர வைத்த கணவன்...' 'ஐ.டி கார்டு காட்டுறதுக்குள்ள மொரட்டு தடியால அடி பின்னிட்டாங்க...' மனைவியிடம் இருந்து தப்பிக்க நாடகமாடிய ஈபி ஆபீசர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேட்டூரில் கள்ளக்காதலியின் கணவரால் தாக்கப்பட்ட மின்வாரிய ஊழியர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தாக்கியதாக கூறி பொய் சொன்னதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஊரடங்கை உத்தரவை மீறி ஊர் சுற்றுபவர்களை போலீசார் பலவிதமான நூதன தண்டனைகளை கொடுத்து வீட்டுக்குள் அனுப்பி வருகின்றனர். ஆனால், அத்தியாவசிய பணிக்கு சென்ற தன்னை போலீசார் தாக்கியதாக ஒரு மின்வாரிய ஊழியர் கூறி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் பழனிசாமி(48). இவருக்கு மனைவி 37 வயதில் மனைவியும, 20 வயது, 15 வயது என இரு மகன்களும் உள்ளனர்.
மின்சாரம் அத்தியாவசிய தேவையாக இருப்பதால், ஊரடங்கின்போதும் பழனிசாமி பணிக்கு சென்று வந்தார். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலைப் பணிக்குச் சென்ற பழனிசாமி பணி முடித்து மூன்று மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டுக்குச் சென்றவர் மாலையில் மீண்டும் அலுவலகம் சென்று, அங்கிருக்கும் ஊழியார்களிடம் தன்னை ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாக்கியதாக கூறியுள்ளார். நடந்த சம்பவத்தை சக ஊழியர்கள் விசாரித்துள்ளனர்.
ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்ததபோலீசார் தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது தான் மின்வாரிய ஊழியர் என்று கூறியதாகவும் அதை நம்பால் தாக்கியதாக பழனிசாமி கூறியுள்ளார்.மேலும், ஐ.டி கார்டை எடுத்து காட்டுவதற்குள் முரட்டுத்தனமாக தடியால் அடித்ததாகக் கூறி உடம்பில் உள்ள காயங்களை சக ஊழியர்களிடம் காட்டி உள்ளார்.
காயத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், பழனிசாமி கூறியதை உண்மை என நம்பி அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின் வாரிய தலைவர் வரை புகாரை கொண்டு சென்றனர்.
மின்வாரிய ஊழியரை போலீசார் அடித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் சக ஊழியர்கள் பதிவிடவும் செய்தனர். பழனிசாமிக்கு ஆதரவாகவும் போலீசாரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
மேலும் புகார் நகல் ஒன்றை மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சௌந்தரராஜனிடம் வழங்கினர். அதிர்ச்சி அடைந்த டிஎஸ்பி அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர் மீது யார் தாக்குதல் நடத்தியது என விசாரித்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனால், புகைப்பட ஆதாரத்துடன் புகார் வந்துள்ளதே என டிஎஸ்பி கேட்க, அதிர்ந்து போன போலீசார் பழனிசாமி பணி முடிந்து வெளியே வந்த சாலை முதல் தாக்குதல் நடைபெற்றதாக புகார் அளித்த இடம் வரை உள்ள அனைத்து சி.சி.டி.வி., கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் பழனிசாமி அவ்வழியே வந்தற்கான எவ்வித பதிவுகளும் இல்லை. அதனால் சந்தேகமடைந்த போலீசார் சக ஊழியர்கள் முன்னிலையில் பழனிசாமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை பழனிசாமி கூறினார். மின்வாரியத்தில் திருமணம் ஆன 22 வயதான இளம்பெண் ஒருவர் பயிற்சிக்காக அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அவரிடம் சாதுர்யமாக பேசியும், நிரந்தர வேலை வாங்கித்தருவதாக சொல்லியும் பழனிசாமி பழகி வந்துள்ளார். இப்படியாக ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையிலான கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த இளம்பெண்ணின் கணவர் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண் பழனிசாமி உடன் பழகுவதை நிறுத்தி உள்ளார். ஆனால் பழனிசாமி தொடர்ந்து அந்த பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்
இது தொடர்பாக அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் கணவர், செவ்வாய்க்கிழமை மனைவி மூலம் பழனிசாமியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
செவ்வாய்கிழமை வேலை முடித்து புறப்பட்டு, தனது வீட்டுக்குச் செல்லாமல் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார் பழனிசாமி. அங்கு தயாராக இருந்த அந்த பெண் வீட்டிற்குள் அழைத்து கதவை பூட்டியுள்ளார்.
வீட்டுக்குள் இருந்த இளம்பெண்ணின் கணவர், பழனிசாமியை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார். அடி வாங்கியது குறித்து தனது மனைவிக்கு தெரிந்தால் குடும்பத்தில் குழப்பம் ஆகிவிடும் என்பதற்காக, போலீசார் அடித்ததாக நாடகமாடியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார் பழனிசாமி.
இந்த தகவல் அறிந்த மின்வாரியம், போலீசார் குறித்து அவதூறாகவும், சக ஊழியர்களிடம் பொய் சொல்லி அலைக்கழிக்க வைத்த அவரை சஸ்பெண்ட் செய்தனர். மேலும் போராட்டம் நடத்திய ஊழியர்கள், போலீசாரிடம் வருத்தம் தெரிவித்து அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் ஐந்து மணி நேரமிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.