"வெற்றிமாறனோட பெரிய ரசிகன் நான்".. விடுதலை படம் பார்த்த தினேஷ் கார்த்திக்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Apr 08, 2023 01:53 PM

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தை பார்த்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் படம் குறித்து பேசும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Cricketer Dinesh Karthik watched Viduthalai Movie Video

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகியுள்ளது.

விடுதலை படத்தில் நடிகர்கள் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Cricketer Dinesh Karthik watched Viduthalai Movie Video

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

பீரியட் டிராமா திரைப்படமான இப்படத்தில் புதிதாக காவல்துறையில் டிரைவராக சேரும் குமரேசன் (சூரி) அங்கு காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் மக்கள் படை தலைவர் பெருமாள் என்கிற வாத்தியார் (விஜய் சேதுபதி) பிடிபட எவ்வாறு காரணமாகிறார்? இதில் மக்கள் காவல்துறையினரை நம்புகின்றனரா அல்லது மக்கள் படை தலைவர் பக்கம் நிற்கின்றனரா? இதன் பிரச்சனை தொடங்கும் மையம் எது ? இதற்குள் நடக்கும் அரசியல் பின்னணி என்னென்ன? என்று பல கோணங்களில் உருவாகி இருக்கிறது விடுதலை திரைப்படம்.

Cricketer Dinesh Karthik watched Viduthalai Movie Video

இந்நிலையில், விடுதலை படம் பார்த்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக். படம் பார்த்த பிறகு பேசிய தினேஷ் கார்த்திக்,"நான் வெற்றிமாறனோட பெரிய ரசிகன். எப்போதும் போல, இந்த படமும் சிறப்பா வந்திருக்கு. நான் ரொம்ப என்ஜாய் பன்னேன். சூரி நல்லா நடிச்சிருக்காரு. விஜய் சேதுபதி சொல்லவே வேண்டாம். படம் ஏற்கனவே சக்ஸஸ் ஆகிடுச்சு. இன்னும் வெற்றிபெற வாழ்த்துக்கள்இரண்டாம் பாகத்துக்கு ஆர்வமா காத்திருக்கேன்" என்றார்.

 

Tags : #VIDUTHALAI #DHINESH KARTHIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cricketer Dinesh Karthik watched Viduthalai Movie Video | Tamil Nadu News.