வேகமாக 'நெஞ்சில்' பாய்ந்த கிரிக்கெட் பந்து...! 'நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்த வீரர்...' விளையாட்டின்போது நடந்த விபரீதம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 09, 2020 11:31 PM

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக நெஞ்சில் பாய்ந்த பந்தால் உயிரை இழந்த சிறுவனின் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Cricket ball hit the player\'s death - Chengalpattu tragedy

கடந்த டிசம்பர் 29ம் தேதியிலிருந்து பிப்ரவரி 23ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே அகரம் என்ற கிராமத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அணிகளாக சேர்ந்து கலந்து கொண்டு விளையாடி வந்தனர்.

முதல் சுற்று முடிவடைந்து, இன்று இரண்டாவது சுற்று விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.  போட்டியில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அணியும், அச்சிறுப்பாக்கம் அணிகளும் விளையாடிக்கொண்டிருந்த போது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். எதிரணியைச் சேர்ந்த கமலேஷ் என்ற 11-ம் வகுப்பு மாணவன் பந்து வீசியுள்ளார். பந்து சுனில் மார்பின்மீது வேகமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மார்பை பிடித்துக் கொண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் செல்லும் போது சுனில் துருத்தஷ்ட வசமாக  உயிரிழந்துள்ளார். மருத்துவ மனையை அடைந்த பிறகு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுனில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

உடனடியாக அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்

Tags : #CRICKETBALL