தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி... உச்சகட்ட எதிர்பார்ப்பு!.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன்... முதல்வர் ஸ்டாலின் அவசர மீட்டிங்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவாசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் முதல்வர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதில் தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு, மூலப்பொருட்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர், பாரத் பயோடெக் நிறுவன மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் டெண்டருக்கு தமிழக அரசு உலகளவில் அழைப்பு விடுத்துள்ளது. இந்த டெண்டருக்கான கடைசி தேதி ஜூன் 5 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான சூழல் உருவாகி வருகிறது.