‘ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை’.. பிரச்சனையை கிளப்பும் பீட்டா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 04, 2019 11:49 AM

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.

Bulls hit and bitten during Jallikattu, Says PETA report

தமிழகம் முழுவதும் தை பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமான நிகழ்வாகும். இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும் , காளைகள் தாக்கி மக்கள் உயிரிழப்பதாகவும் கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா நீதிமன்றத்தில் இதற்கு ஜல்லிக்கட்டிற்கு வாங்கியது. இதனால் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறமால் இருந்தன.

இதனை அடுத்து கடந்த 2016 -ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தால், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம் போல நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆய்வு செய்ததில் 42 பொதுமக்களும், 14 காளைகளும் உயிரிழந்திருப்பாதாக கூறியுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளின் வால்கள் கடிக்கப்படுவதாகவும், முறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Tags : #PETA #JALLIKATTU