“இயற்கைக்கு முன்னால நாமெல்லாம் ஒன்னுமே இல்ல.. துக்கத்துல பேச முடியாது!” .. எஸ்பிபி உடல்நிலை - எம்ஜிஎம் மருத்துவமனையில் அழுதேவிட்ட பாரதிராஜா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு, அவரது மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தஙகை எஸ்பி சைலஜா மற்றும் அவரது உறவினர்கள் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இளையராஜா மற்றும் வெங்கட் பிரபு வருகை தருவதாகவும் தெரிகிறது.

அத்துடன் கூடுதல் காவல் ஆணையர் அருண் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வந்தது. மேலும் திரைத்துறை பிரபலங்களும் வருகை தரத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு வருகை தந்த பாரதிராஜா, “சில சூழலில் வார்த்தைகள் வராது. இயற்கைக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமில்லை. எஸ்பிபி மாதிரி ஒரு அற்புதமான மனிதர். துக்கத்துல பேச முடியாது. சந்தோஷத்துலதான் பேச முடியும்.” என்று தழுதழுத்த குரலில் பத்திரிகையாளர்களிடையே பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
