'ஆயில் மசாஜ், கட்டிங், ஷேவிங்' கட்டணம் உயர போகுது'... 'அதிரடி அறிவிப்பு'...வெளியான விலை பட்டியல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 20, 2019 11:36 AM

ஜனவரி 1-ந்தேதி முதல் சலூன் கட்டணம் உயரப்போவதாக, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் (முடிதிருத்தும் தொழிலாளர்கள்) அறிவித்துள்ளது. புதிய விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Salon Fare will be increasing from January 1st

அழகு சாதன பொருட்கள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக, சலூன் கட்டணங்களை உயர்த்தும் முடிவுக்கு வந்திருப்பதாக, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி புதிதாக உயர்த்தப்பட்டுள்ள விலை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முடிதிருத்தல்(முடி வெட்டுதல்) மற்றும் முகமழித்தல் (ஷேவிங்) கட்டணம் ரூ.220, முடி வெட்டுதல் மட்டும் ரூ.160, ஷேவிங் மட்டும் ரூ.100, ஸ்பெஷல் ஷேவிங் ரூ.120, சிறுவர்கள் முடி வெட்டுதல் ரூ.130, சிறுமி முடி வெட்டுதல் ரூ.140, தாடி ஒதுக்குதல் ரூ.120, தலை கழுவுதல் ரூ.100, முடி உலர்த்துதல் ரூ.100, தலை ஆயில் மசாஜ் ரூ.300 முதல், வெள்ளை முடி கருப்பாக்குதல்(டை) ரூ.350 முதல், பேஸ் பிளிச்சிங் ரூ.500 முதல், பேஷியல் ரூ.1,200 முதல் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : #SALON #SALON FARE #BARBER #BARBER ASSOCIATION