“2 லட்ச ரூபாய் ஐபோனை காணும்”! - நண்பர்கள் மீது சந்தேகமா? நடிகை ஷாலு ஷம்மு பரபரப்பு புகார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உங்களிடம் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
ஷாம்லி என அழைக்கப்படும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருபவர். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் அவ்வப்போது இவர் நடனமாடி வெளியிடும் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருடைய ஐபோன் திருட்டு போய்விட்டதாக இவர் புகார் அளித்துள்ளார்.
புரசைவாக்கத்தில் வசித்து வரும் நடிகை ஷாலு ஷம்மு, கடந்த ஜனவரி மாதம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து ஐபோன் 14 PRO Max ஒன்றை வாங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய இவர், பிறகு ஏப்ரல் 10-ஆம் தேதி தம்முடைய விலை உயர்ந்த ஐபோன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதன்பிறகு தான் சென்ற இடங்கள், செல்போன் வாங்கிய ஷோரூம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார். ஆனாலும் செல்போன் கிடைக்காததை அடுத்து கடந்த 11ஆம் தேதி தன்னுடைய செல்போன் காணாமல் போனதாக ஷாலு ஷம்மு புகார் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் நடிகை ஷாலு ஷம்மு தம்முடைய போன் தொலைந்து விட்டதாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதேபோல் ஆபத்தில் உதவுவதே உண்மையான நண்பன் என்கிற பழமொழியை பேசி வீடியோ வெளியிட்டு இருக்கும் ஷாலு ஷம்மு, “நான் என் நண்பர் மீது புகார் கொடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷாலு ஷம்முவின் இந்த பேச்சு அவரை பின்தொடர்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தன்னுடைய போன் திருட்டு போனதாக புகார் கொடுத்த பிறகு சி எஸ் ஆர் காப்பியை பெற்று விட்டதாகவும் ஷாலு ஷம்மு தெரிவித்திருக்கிறார். இந்த புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் உங்களுடைய போன் திரும்பி கிடைத்துவிடும் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.