“தயவுசெஞ்சு ஹெல்மெட் போடுங்க”.. ஒரே போட்டியில் எல்லார் கவனத்தையும் ஈர்த்த வீரர்.. யுவராஜ் சிங் முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பருக்கு யுவராஜ் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி 50 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இதில் சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பரான ஷெல்டன் ஜாக்சனின் செயல்பாடு பலரது பாராட்டையும் பெற்றது.
35 வயதான ஷெல்டன் ஜாக்சன் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய அனுபவத்தை கொண்டவர். வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த அவருக்கு தற்போது கொல்கத்தா அணியில் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தினார். குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் உத்தப்பாவை ஸ்டம்பிங் செய்தது போட்டியில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ஷெல்டன் ஜாக்சனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், டியர் ஷெல்டன் ஜாக்சன், தயவுசெய்து நீங்கள் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக கீப்பிங் செய்யும்போது ஹெல்மெட் போடாமல் இருக்க கூடாது. நீங்கள் ஒரு திறமையான வீரர். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் பாதுகாப்பாக இருங்கள். ஆல் தி பெஸ்ட்’ என யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
Thank you so so much bhaiya🙏❤️❤️ https://t.co/aqbyzsUIpQ
— Sheldon Jackson (@ShelJackson27) March 26, 2022
இதற்கு ஷெல்டன் ஜாக்சன் நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினும் ஷெல்டன் ஜாக்சனை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.