'இங்கிலாந்து போற டீம்க்கு செலக்ட் ஆனது ரொம்ப சந்தோசம்'... 'அதோடு கொரோனாவும் குணமாயிடுச்சு'... பிரபல வீரர் போட்ட பதிவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமீண்டும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி எனத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா. இவர் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹாவும் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார் அவர். பயோ பபுளில் இருந்த வீரர்களில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளான வீரர்களில் சாஹாவும் ஒருவர்.
அதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். அதையடுத்து தற்போது கொல்கத்தாவில் உள்ள குடும்பத்தினருடன் பொழுதை இனிதாகச் செலவழித்து வருகிறார். வரும் ஜூன் 2ஆம் தேதியன்று மும்பையிலிருந்து இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளது.
அதற்கு முன்னதாக குடும்பத்தினரைச் சந்திக்க சாஹா விரும்பியதால் அவரது விருப்பத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கி உள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி எனத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
— Wriddhiman Saha (@Wriddhipops) May 18, 2021

மற்ற செய்திகள்
