MAHA SHIVARATRI : ஈஷாவில் சத்குரு பற்றி கங்கனா உருக்கம்.. வைரல் ஆகும் நடனம்..!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Madhavan P | Mar 02, 2022 07:51 AM

இந்து சமய மக்களின் முக்கிய தினங்களுள் ஒன்றான மஹா சிவராத்திரி நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று இரவு சிவன் கோவில்களில் ஆகம விதிகளின்படி நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன.

Maha Shivaratri 2022 Kangana Ranaut Isha Chathguru dance

ஈஷாவில்

ஒவ்வொரு வருடமும் கோவையில் சத்குருவால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஈஷா யோகாவில் மஹா சிவராத்திரி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் இங்கே மஹா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் பல முன்னணி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

Maha Shivaratri 2022 Kangana Ranaut Isha Chathguru dance

இந்த பெரும் விழாவில் கலந்துகொண்ட அனைவர்க்கும் சத்குருவால் சக்தியூட்டப்பட்டதாக சொல்லப்படும் சிறப்பு ருத்ராட்சங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கங்கனா ரனாவத்

ஈஷாவில் நடைபெற்ற இந்த சிறப்பு மஹா சிவராத்திரி விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கலந்துகொண்டார். சத்குரு பற்றி பேசுகையில்,' நான் ராமர் காலத்தில் பிறக்கவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக சத்குருவின் காலத்தில் நான் பிறந்திருக்கிறேன். எனக்கு இங்கே வருவது மிகவும் பிடித்திருக்கிறது" என உருக்கமாக குறிப்பிட்டார்.

நடனம்

பின்னணி பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இசை கச்சேரியின் போது அங்கே குழுமி இருந்த அனைவரும் இணைந்து பாடினர். தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சத்குரு உள்ளிட்டோர் நடனம் ஆடி பரவசமடைந்தனர். நடிகை கங்கனா ரனாவத்தும் இசை நிகழ்ச்சியின் போது நடனமாடினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

இதேபோல, கடந்த ஆண்டு ஈஷாவில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகை  அகர்வால், சமந்தா ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #MAHASHIVARATRI2022 #KANGANARANAUT #ISHA #மஹாசிவராத்திரி #கங்கனாரனாவத் #ஈஷா #சத்குரு

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maha Shivaratri 2022 Kangana Ranaut Isha Chathguru dance | Lifestyle News.