‘சச்சின் மகள் சாராவுடன் காதல் கிசுகிசு’!.. முதல்முறையாக இதுக்கு விளக்கம் கொடுத்த சுப்மன் கில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் டெண்டல்கரின் மகள் சாராவுடன் காதல் என கிசுகிசுப்பட்டது குறித்து முதல்முறையாக சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இதனை அடுத்து 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 378 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 ரன்கள் அடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்கள் கவனத்தை ஆண்டுதோறும் ஈர்த்து வந்தார். இதன்காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருகிறார். தற்போது இங்கிலாந்து செல்ல உள்ள இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியிலும் சுப்மன் கில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், ‘நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை போன்று ஒரு க்ளோனிங் நபரை உருவாக்கும் எண்ணம் எதிர்காலத்தில் இல்லை’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இதன்மூலம் சச்சின் மகள் சாராவை சுப்மன் கில் காதலிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
