கடைசி தொடரில் களமிறங்கிய செரினா வில்லியம்ஸ்.. உலகமே அவரோட 'SHOE' பத்திதான் பேசிட்டு இருக்கு.. அப்படி என்ன ஸ்பெஷல் அதுல?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் தனது கடைசி அமெரிக்க ஓப்பன் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் அவர் அணிந்திருந்த ஷூ பலரது கவனத்தையும் ஈர்த்தது.

செரினா வில்லியம்ஸ்
அமெரிக்க சேர்ந்த செரினா வில்லியம்ஸ், உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1981 ஆம் ஆண்டு பிறந்த செரீனா இதுவரையில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் செரீனா, கடந்த ஒரு வருடங்களாக காயம் காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொண்டார். இதனிடையே டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் தற்போது துவங்கியிருக்கும் அமெரிக்க ஓப்பன் தொடரே செரினாவின் கடைசி தொடராக இருக்கும் என்பதால் அவருடைய போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அமெரிக்க ஓப்பன்
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப்பன் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடந்தன. இதில் ஆண்கள் பிரிவில் ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரஷியாவின் டேனில் மெட்விடேவ், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் மாண்டினீக்ரோவின் டாங்கா கோவினிச்சை 6-3, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். இது செரினாவின் இறுதி தொடர் என்பதால் இந்த போட்டியை காண 29,000 ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
வைரம் பதித்த ஷூ
இந்த போட்டியில் செரினா அணிந்து விளையாடிய ஷூ பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் இந்த ஷூவில் 400 வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனமான நைக் நிறுவனத்துடன் இணைந்து செரினாவே இதனை வடிவமைத்துள்ளார். அதில் லேஸ் கட்டும் பகுதியில் ‘Mama’ மற்றும் ‘Queen’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல அவருடைய மேலாடையும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | விருந்துல அப்பளம் வைக்காததால் ஆத்திரம்.. களேபரமான கல்யாண மண்டபம்.. தெறிச்சு ஓடிய உறவினர்கள்..
