"அவங்க ரெண்டு பேரும் தான் குரு".. CSK பத்தி எய்டன் மார்க்ரம் EXCLUSIVE.. மனுஷன் பெரிய FAN-ஆ இருப்பாரு போலயே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலாகலமாக நடைபெற்று வந்த SAT20 தொடர் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்ட் கேப் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் இறுதிப்போட்டிக்கு முன்னர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners
தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த முதல் SA20 லீக் தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இதன் தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்மித் செயல்பட்டு வருகிறார். இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. மேலும் இதில் உள்ள அணிகளை ஐபிஎல் அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners
முதல் SAT20 தொடரின் இறுதி போட்டிக்கு பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தேர்வான நிலையில், பின்னர் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபைனலுக்கு சென்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களுக்கு 135 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 16.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் கோப்பையையும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோலோஃப் வான் டெர் மெர்வே தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகன் விருது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரமிற்கு வழங்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners
இறுதிப்போட்டிக்கு முன்னதாக எய்டன் மார்க்ரம் மற்றும் வெய்னி பர்னல் ஆகியோர் நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருந்தனர். அப்போது பேசிய மார்க்ரம் SAT20 தொடர் குறித்தும் உலக கிரிக்கெட் தொடர்கள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது கேப்டன்சி பற்றிய விஷயங்களை யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மார்க்ரம்,"நிறைய போட்டிகளில் டூபிளெஸ்ஸி தலைமையில் விளையாடியிருக்கிறேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றிருக்கிறார். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தோனியிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன்" என்றார்.
மேலும், கேன் வில்லியம்சனிடமிருந்தும் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் ஆம்லா மற்றும் டுமினி போன்ற சக வீரர்களிடம் இருந்தும் பல்வேறு நுணுக்கங்களை அறிந்துகொண்டதாகவும் மார்க்ரம் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
