‘யாருப்பா அந்த பையன்?’.. அம்பயர் அவுட் கொடுக்குறதுக்கு முன்னாடியே வெளியேறிய வீரர்.. பாராட்டும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
Also Read | ஏன் ஒரு மேட்ச்ல கூட அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை?.. முதல்முறையாக மௌனம் கலைத்த சச்சின்..!
இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது ப்ளே ஆஃப் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் களமிறங்கிய குஜராத் அணி, 19.3 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு குஜராத் அணி முதலாவதாக நுழைந்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 3 ரன் எடுத்திருந்த போது குஜராத் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் வீசிய ஓவரில் ஜெய்ஸ்வாலின் பேட்டில் பந்து லேசாக பட்டுச் சென்றது. உடனே விக்கெட் கீப்பர் சாஹா கேட்ச் பிடித்தார்.
இதனால் குஜராத் வீரர்கள் அம்பயரிடம் அவுட் கேட்டு முறையிட்டனர். ஆனால் அம்பயர் அவுட் வழங்குவதற்கு முன்னதாகவே ஜெய்ஸ்வால் பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஜெய்ஸ்வால் தானாகவே வெளியேறியதை கண்ட அம்பயர் தனது கையை உயர்த்தி அவுட் வழங்கினார். அம்பயரின் முடிவுக்கு காத்திராமல் நேர்மையாக வெளியேறிய இளம் வீரர் ஜெய்ஸ்வாலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Also Read | கேட்ச் பிடிக்கும்போது வழுக்கி விழுந்த கேப்டன்.. நல்லவேளை காயம் ஏற்படல.. இல்லைன்னு ஃபைனல்ல அவ்ளோ தான்..!