'ஹாட்ரிக்' கோல் அடித்து அலறவிட்ட ரொனால்டோ.. கண்கலங்கிய காதலி.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 13, 2019 03:59 PM

உலகக் கால்பந்து வீரரான ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தவுடன் அவரின் மனைவி மகிழ்ச்சியில் கண்கலங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ronaldo hat trick puts Juventus in UCL quarters, Video goes viral

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றின் இரண்டாவது லீக் போட்டி இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஜூவாண்டிஸ் அணி மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் ஆகிய இரு அணிகள் மோதிக்கொண்டன.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 27 -வது நிமிடத்தில் ஜூவாண்டிஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோல் அடித்து மைதானத்தையே அலறவிட்டார். முதல் பாதி நேர முடிவில் 1-0 என்கிற கணக்கில் ஜூவாண்டிஸ் அணி முன்னிலையில் இருந்தது.

இதனை அடுத்து நடைபெற்ற 2 பாதி நேர ஆட்டத்தில் ரொனல்டோ தனது இரண்டாவது கோலை அடித்தார். இதற்கடுத்து பெனால்டி முறையில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் 3-0 என்கிற கணக்கில் ஜூவாண்டிஸ் அணி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேரியது. ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோவை அவரது ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரத்துடன் கொண்டாடித்தீர்த்தனர்.

இதனை ரசித்துக் கொண்டிருந்த ரொனால்டோவின் காதலி மகிழ்ச்சியில் கண்கலங்கி நின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #RONALDO #JUVEATLETI #UCL #FINOALLAFINE #FORZAJUVE #CHAMPIONSLEAGUE