IPL2022: "நீங்க அவுட் தம்பி, கிளம்புங்க.." DRS பெயரில் அரங்கேறிய குழப்பம்.. மைதானத்தில் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடர், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
அதே போல, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது.
ஐபிஎல் லீக் சுற்றும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மற்ற 3 இடங்களில் எந்த அணிகள் முன்னேறும் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர்.
பரபரப்பு சம்பவம்
இதன் காரணமாக, ஒவ்வொரு போட்டியும் நிச்சயம் முழு விறுவிறுப்பாக தான் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (14.05.2022) மோதி இருந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று, சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி இருந்த போட்டியில், 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
நடராஜன் எடுத்த விக்கெட்
இந்த வெற்றியின் காரணமாக, கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மறுபக்கம், ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து மோசமான ஃபார்மில் உள்ளது ஹைதராபாத் அணி. முன்னதாக, இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 12 ஆவது ஓவரை நடராஜன் வீசி இருந்தார்.
நீங்க அவுட் தம்பி, கிளம்புங்க..
இந்த ஓவரின் 3 ஆவது பந்தை கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் எதிர்கொண்டார். நடராஜன் பந்து, ரிங்குவின் பேட்டில் பட்டு பேடில் பட்டது போல தெரிய, எல்பிடபுள்யூ முறையில், நடுவர் அவுட் என அறிவித்தார். இதன் பின்னர், ரிங்கு சிங்குடன் மறுபுறம் நின்ற சாம் பில்லிங்ஸ், DRS அப்பீல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிங்கு மற்றும் சாம் ஆகியோர் பேசிக் கொண்டு நின்றுள்ளார். இதனையடுத்து, DRS நேரமான 15 வினாடிகள் முடிந்த நிலையில், ரிங்கு சிங்கை அவுட் என அறிவித்தார் நடுவர்.
அதாவது, பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் தான் DRS அப்பீல் செய்ய வேண்டும். ஆனால், ரிங்கு சிங் அமைதியாக மைதானத்திலேயே நிற்க, DRS கேட்பதற்கான 15 வினாடிகள் முடிந்ததும் அவரை அவுட் எனக் கூறி வெளியேற அறிவுறுத்தினார் நடுவர். இது பற்றி, ரிங்கு நடுவரிடம் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டார்.
இறுதியில், பேட்ஸ்மேன் அப்பீல் செய்யாத காரணத்தினால், ரிங்கு சிங் அவுட்டாகி வெளியேறினார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8