வாழ்த்த வந்த வயதான நபர்.. டக்குன்னு காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிய நீரஜ் சோப்ரா.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதடகள வீரரான நீரஜ் சோப்ரா, வயதான நபர் ஒருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நீரஜ் சோப்ரா
ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தில் 1997 ஆம் ஆண்டு பிறந்தார் நீரஜ் சோப்ரா. சிறுவயதில் உடல் பருமனாக இருந்ததால் எடையை குறைக்கும் நோக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி உள்ளார். அதன்பிறகு அதுவே அவரது வாழ்க்கை பயணம் ஆகிப்போனது. 2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை ஒளிரச் செய்தார். இதன்மூலம் உலக தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அதனை தொடர்ந்து உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த் என அவரது பதக்க வேட்டை துவங்கியது.
வைரல் வீடியோ
சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம்-ல் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். இதில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார் சோப்ரா. இதனை தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே வந்த நீரஜ் சோப்ரா, அங்கு தனக்காக காத்திருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது வெகுநேரமாக காத்திருந்த வயதான நபர் ஒருவருடைய காலை தொட்டுக் கும்பிட்டு சோப்ரா ஆசிர்வாதம் வாங்கினார்.
நீரஜ் சோப்ரா, தன்னை வாழ்த்த வந்த வயதான நபரின் காலை தொட்டு வணங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
So down to earth this person @Neeraj_chopra1 ❣️Took blessing from an elderly fan. That speaks volumes. Love you ❤️ pic.twitter.com/jjo9OxHABt
— Your ❤️ (@ijnani) June 30, 2022

மற்ற செய்திகள்
