RRR Others USA

கேப்டனாக இல்லாம.. சிஎஸ்கே அணிக்காக 'தோனி' ஆடிய ஒரே போட்டி.. நெகிழ வைத்த 'தல'.. இது எப்போங்க நடந்துச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 25, 2022 02:30 PM

ஐபிஎல் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த எம்.எஸ். தோனி, அந்த பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

MS dhoni once as a player for csk and raina leads team

மேலும், தன்னுடைய கேப்டன் பொறுப்பை, ரவீந்திர ஜடேஜாவிற்கும் அளித்துள்ளார் தோனி. இதனை சிஎஸ்கே அணி நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த முறையும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தான் செயல்படுவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

புதிய கேப்டன் ஜடேஜா

இருந்தாலும், மற்றொரு சிஎஸ்கே வீரரான ரவீந்திர ஜடேஜாவின் புதிய பொறுப்புக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய புதிய பொறுப்பு பற்றி பேசிய ஜடேஜாவும், தோனியுடன் பல நேரங்களில் பேசி முடிவுகளை எடுப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆல் ஏரியாலயும் 'பெஸ்ட்'

சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே, கேப்டனாக இருந்து வழிநடத்தி வரும் தோனி, அந்த அணிக்காக 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், 9 முறை ஐபிஎல் இறுதி போட்டியிலும் அவரது தலைமையில் சென்னை அணி ஆடியுள்ளது.

இது போக, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை  சாம்பியன்ஸ் லீக் தொடரையும் கைப்பற்றியுள்ளது. அப்படி ஒரு பெருமை வாய்ந்த கேப்டன், இனிமேல் அணியில் ஒரு வீரராக களமிறங்குவது தான், ரசிகர்களை கடுமையாக வாட்டியுள்ளது.

வீரராக இறங்கிய தோனி

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக கேப்டன் இல்லாமல், ஒரே ஒரு முறை பேட்ஸ்மேனாகவும் களமிறங்கியுள்ளார் தோனி. கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில், சென்னை மற்றும் யார்க்ஷைர் அணிகள் மோதின. இந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அடுத்த சுற்றுக்கு போக முடியாது என்ற நிலை இருந்தது.

வெற்றி பெற்ற 'சிஎஸ்கே'

இதனால், அந்த லீக் போட்டியில், சென்னை அணிக்கு ரெய்னா கேப்டனாக இருக்கும் படி செய்திருந்தார் தோனி. போட்டிக்கு இடையில் இருந்து கேப்டனாக செயல்படாமல், டாஸ் போடுவதில் ஆரம்பித்து, ரெய்னா தான் சென்னை அணியை வழி நடத்தி இருந்தார். இந்த போட்டியில், யார்க்ஷைர் நிர்ணயித்த 141 ரன்கள் என்ற இலக்கை, 19 ஓவரில் எட்டிப் பிடித்து சிஎஸ்கே அணி வெற்றி கண்டிருந்தது.

ஒரே ஒரு போட்டி

சிஎஸ்கே அணிக்காக, தோனி கேப்டன் இல்லாமல் வீரராக களமிறங்கிய ஒரே போட்டி அது மட்டும் தான். இதனையடுத்து, ஜடேஜா தலைமையில், நாளை ஆரம்பமாகும் ஐபிஎல் தொடரில் தான், ஒரு வீரராக, இந்த தொடர் முழுக்க சென்னை அணியில் களமிறங்கவுள்ளார் தோனி.

ஆனால், ஐபிஎல் தொடரில், ஒரு தொடர் முழுவதும் கேப்டனாக இல்லாமல், வீரராக மட்டுமே தோனி களமிறங்கி உள்ளார். புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக, தோனி ஆடிய இரண்டாவது சீசனில், அந்த அணியை ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #SURESHRAINA #CHENNAI-SUPER-KINGS #IPL 2022 #CHAMPIONS LEAGUE #ரவீந்திர ஜடேஜா #எம்.எஸ். தோனி #சுரேஷ் ரெய்னா #CAPTAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS dhoni once as a player for csk and raina leads team | Sports News.