அடக்கடவுளே.! கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் அக்கவுண்டில் இருந்து மாயமா.? .. என்ன நடந்தது? - உடைக்கும் உசைன் போல்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதடகள வீரரான உசேன் போல்ட் முதலீடு செய்திருந்த மில்லியன் கணக்கான தொகை மாயமானதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது குறித்து மனம் திறந்து இருக்கிறார் போல்ட்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!
ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரரான உசேன் போல்ட் ஓட்டப் பந்தயத்தில் உலக அளவில் செய்த சாதனையை இன்னும் யாராலும் நெருங்க கூட முடியவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு சீன தலைநகர் பீய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் போல்ட் கலந்து கொண்டார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.69 வினாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனை படைத்து தங்கம் வென்றார் போல்ட். இதனையடுத்து 200 மீட்டர் மற்றும் ரிலே போட்டியிலும் கலந்து கொண்டு உலக சாதனையை தன்வசமாக்கினார். அடுத்தடுத்து தன்னுடைய சாதனைகளையே தனக்கு இலக்காக இருக்க வேண்டும் என கருதிய போல்ட் பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய சாதனைகளை தானே முறியடித்து காட்டினார். இதனால் உலகம் முழுவதிலும் உள்ள தடகள வீரர்களுக்கு ஆதர்சமாக திகழ்கிறார் உசேன் போல்ட்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், உசேன் போல்ட் தன்னுடைய பணத்தை முதலீட்டு நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்திருந்ததாகவும் அதில் இருந்த 12 மில்லியன் டாலர் மாயமானதாகவும் தகவல்கள் பரவின. இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உசேன் போல்ட் இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து உசேன் போல்ட் பேசுகையில்,"யாருக்கும் அவர்கள் கடினமாக உழைத்ததை இழப்பது எப்போதுமே ஒரு சோகமான சூழ்நிலையாக இருக்கும். ஆனால் இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. இது தொடர்பாக நான் சில கருத்துக்களை படித்தேன். மக்களை போலவே நானும் குழப்பத்தில் தான் இருக்கிறேன். ஆகவே, இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை. என்ன நடக்கிறது என பார்ப்போம்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து தன்னுடைய எதிர்காலம் குறித்து பேசிய அவர்,"நான் உடைந்து போகவில்லை, ஆனால் அது நிச்சயமாக என்னை பாதித்திருக்கிறது. அந்த தொகை என் எதிர்காலத்திற்காக இருந்தது. எனக்கு மூன்று குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும், நான் இன்னும் என் பெற்றோரை கவனித்து வருகிறேன். நான் இன்னும் நன்றாக வாழ விரும்புகிறேன்" என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் மாயமான தொகை குறித்து உசேன் எவ்வித தகவல்களையும் பகிரவில்லை என தெரிகிறது.