"உசேன் போல்ட் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டாரா...?" "ஹலோ ஒலிம்பிக் பாய்ஸ்..." "இங்க பாருங்க எங்க ஊரு சிங்கங்களை..."
முகப்பு > செய்திகள் > இந்தியாகம்பளா எருமை மாட்டு பந்தயத்தில் சீனிவாச கவுடாவின் சாதனையை ஒரு சில நாட்களிலேயே மற்றொரு வீரர் முறியடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கம்பளா போட்டி கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிணகன்னடா, கார்வார் ஆகிய பகுதிகளில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி உடுப்பி அருகே இலகலில் நடந்த கம்பளா போட்டியில் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த கம்பளா போட்டி வீரர் சீனிவாச கவுடா என்பவர் கலந்துகொண்டார்.
இந்த போட்டியில் சீனிவாசகவுடா சேறு, சகதியுமான பந்தய பாதையில் 142.5 மீட்டர் இலக்கு தூரத்தை 13.62 வினாடிகளில் மாடுகளை ஓட்டிச்சென்று முதல் பரிசை வென்றார். இப்போட்டியில் உசைன் போல்டின் உலக சாதனையை சீனிவாச கவுடா முறியடித்தார்.
அதாவது, இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9.55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் என்பதே சீனிவாச கவுடாவை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கக் காரணமாக இருந்தது.
இந்நிலையில் இவரது சாதனையை முறியடிக்கும் நிலையில் நிஷாந்த் ஷெட்டி என்ற மற்றொரு வீரர் தற்போது 143 மீ தொலைவை 13.68 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அதாவது, 100மீ தொலைவை 9.51 வினாடிகளில் கடந்து முந்தைய சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார். உசேன்போல்ட் சாதனைகளை முறியடித்த நிஷாந்த் ஷெட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.
இந்த சாதனை குறித்து கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி கூறுகையில், கம்பளா போட்டியில் புதிய சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல. ஏனெனில் கம்பளா களத்துக்கும், ஓட்டப்பந்தய களத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது என்றார்.
