பிரீத்தி ஜிந்தா பற்றி ரெய்னா பேசியதும்.. கோபத்தில் வெளியேறிய இர்பான் பதான்.? VIRAL பின்னணி ..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி, 15 ஆவது ஐபிஎல் தொடர் மிகவும் அசத்தலாக ஆரம்பமானது.
இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தன.
இதுவரை 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
'Unsold' ஆன சுரேஷ் ரெய்னா
கடந்த சீசன் வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவை, இந்த முறை நடைபெற்றிருந்த ஐபிஎல் ஏலத்தில், சென்னை உள்ளிட்ட எந்த அணிகளும் எடுக்க முன் வரவில்லை. இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே, ஐபிஎல் தொடரில் களமிறங்காத ரெய்னா, ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். போட்டிகளில் ரெய்னாவை பார்க்க முடியவில்லை என்றாலும், வர்ணனையியில் அவர் ஈடுபடுவதால், ஓரளவுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோபம் அடைந்த இர்பான் பதான்
இந்நிலையில், ரெய்னா சொன்ன விஷயத்தால் இர்பான் பதான் கோபம் அடைய, பின் தெரிய வந்த உண்மை, ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டி குறித்து இர்பான் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பஞ்சாப் அணி குறித்து இருவரும் பேச ஆரம்பித்த போது, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய ஃபேவரைட் அணி பஞ்சாப் தான் என்றும், மிகவும் பலம் வாய்ந்த அணியாகவும் அவர்கள் விளங்குகிறார்கள் என்றும் இர்பான் பதான் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ரெய்னாவும் பஞ்சாப் அணி பற்றி பேசிக் கொண்டிருந்த போது, பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா பற்றி சில கருத்துக்களைக் குறிப்பிட்டார். இதனைக் கேட்டதும் கடுப்பான இர்பான் பதான், "ஒரு பெண்ணுடைய கோணத்தில் பேசுவது அவசியம் இல்லை" என குறிப்பிட்டார்.
கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
அது மட்டுமில்லாமல், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, அருகே உள்ள இருக்கையில் அமரவும் செய்தார் இர்பான் பதான். தொடர்ந்து தான் பங்கெடுக்கவில்லை என்றும் அவர் கூற, இர்பான் பதானை சமாதானப்படுத்துமாறு, ரெய்னாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிவுறுத்தினர். பின்னர் ரெய்னாவும் சென்று அழைக்கவே, உடன் வந்த இர்பான், திடீரென சிரிக்க ஆரம்பித்தார்.
அப்போது தான், ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு வேண்டி, இர்பான் பதான் பிராங்க் செய்தார் என்பது தெரிய வந்தது. இது தொடர்பான வீடியோக்கள், ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.