‘ஆரோன் பின்ச்சை’ தொடரும் ‘மான்கட்’ பரிதாபங்கள்!.. ‘அஸ்வின்’ எச்சரித்ததை தொடர்ந்து ‘அடுத்த’ சம்பவத்தை நடத்திய சிஎஸ்கே ‘வீரர்’! வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅண்மையில் பெங்களூரு- சென்னை அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின் முதல் ஓவரை தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தை வீச வரும்போது, பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன் ஆரோன் பின்ச் கிரீஸை தாண்டிச் சென்றார். இதனால் தீபக் சஹார் ஆரோனை மான்கட் செய்ய முயன்றார்.

Tried to be smart! 😂
Just watched Deepak Chahar's spell against Finch. What a bowler 🔥 https://t.co/fACpDICjEs
— Kaushik 🏏 (@_CricKaushik_) October 10, 2020
கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக பணியாற்றிய அஸ்வின் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வீரர் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தது கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத சம்பவம். இந்த விஷயத்தில், பேட்ஸ்மேனை எச்சரிக்கை செய்யலாம் என்று அஸ்வினுக்கு ரிக்கி பண்டிங் அறிவுரை கூறியிருந்தார்.
அதன் பிறகு தற்போது 4 நாட்களுக்கு முந்தைய போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சை தற்போதைய டெல்லி பந்துவீச்சாளர் அஸ்வின் மன்கவுட் முறையில் அவுட் செய்யாமல், எச்சரித்தார்.

மற்ற செய்திகள்
