"போடுறா வெடிய,,.." இந்தியா 'டீம்' ஆஸ்திரேலியா கூட ஆடப் போறது இப்டி தான்??..." உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்... "என்னவா இருக்கும்??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Nov 12, 2020 04:06 PM

ஐபிஎல் தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

india to wear retro themed jersey against australia says source

இதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். சுமார் இரண்டு மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை விளையாடவுள்ள நிலையில், இதற்காக இந்திய வீரர்கள் அணியவுள்ள ஜெர்சி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வழக்கமாக இந்திய அணி ஜெர்சியை மாற்றாமல் நீண்ட காலம் ஒரே ஜெர்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற அணிகள் அடிக்கடி தங்களது ஜெர்சியில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வந்து கொண்டே இருப்பார்கள்.

தற்போது கூட, இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக புதிய ஜெர்சியை ஆஸ்திரேலியா அணி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் இந்திய அணியும் புதிய ஜெர்சியை அணியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 90 களில் இந்திய அணி வீரர்கள் அணிந்த ரெட்ரோ தீம் ஜெர்சியை தான் இந்திய அணி அணியப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனாலும், இந்திய அணி அணிந்த ஜெர்சிகளில் பலருக்கு மிகவும் விருப்பமான ஜெர்சி என்றால் அது இந்த ரெட்ரோ தீம் ஜெர்சி தான். சச்சின் தெண்டுல்கர், கங்குலி போன்ற பல முன்னாள் வீரர்கள் இந்த ஜெர்சியில் இந்திய அணிக்காக ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India to wear retro themed jersey against australia says source | Sports News.