‘மைதானத்திலேயே உடைந்து அழுத ஷெஃபாலி வெர்மா!’.. ‘தலையை நிமிர்த்துங்கள்’ .. நெகிழ வைத்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 09, 2020 08:07 AM

ஐசிசி உலகக் கோப்பையின் மகளிருக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதால் இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் கண்கலங்கவைத்துள்ளன.

ICC women\'s t20 world cup shafali verma breaks into tears after loosin

ஐசிசி மகளிர்  டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதிக்கொண்டன. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 99 ரன்களில் சுருண்டது. 85 ரன்கள் வித்தியாசத்தில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்த தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, இறுதிப்போட்டியில் சுருண்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதுமட்டுமல்லாமல், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா இறுதிப்போட்டியில் 2 ரன்களில் அவுட்டாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் போட்டிக்கு பின் இந்திய அணியின் தோல்வியினால் உண்டான சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ஷஃபாலி வெர்மா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுத அவரை சகவீராங்கனைகள் தேற்றி ஆறுதல் கூறினர்.

அதுமட்டுமல்லாமல்,  ‘நீங்களும் இந்திய அணியும் கடின உழைப்புடன் உங்கள் அசாத்திய விளையாட்டினால் இந்தியர்களின் இதயம் வென்றுள்ளீர்கள். தலைநிமிர்ந்து வாருங்கள்’ என்று ரசிர்களும்

வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

 

Tags : #ICCWOMENST20WORLDCUP2020 #SHAFALI VERMA