அட இங்க பாருங்க.. ஒரே சீரிஸில் மாஸ் காட்டிய இளம் வீரர்.. ஐ.சி.சி ரேங்கில் செம முன்னேற்றம்.. FANS செம ஹேப்பி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி: ஐ.சி.சி டி20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 18-வது இடத்தை பிடித்துள்ளார். அதே வேளையில் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதன் முறையாக முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளார்.
வீட்டுல கரெண்ட் கட்.. தூக்கக்கலக்கத்தில் பல் துலக்கிய இளம்பெண்.. கடைசியில் தெரியவந்த ஷாக் தகவல்..!
தரவரிசை பட்டியல்
டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-இலங்கை டி20 தொடர் வரை கணக்கில் சேர்க்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஸ்ரேயாஸ் ஐயர்
தனது டிரேட் மார்க் கவர் டிரைவ் மூலம் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சமீப காலமாக பெரிதாக சோபிக்காததால் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஏற்கனவே இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பிடிப்பதில் பல்வேறு போட்டிகள் இருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிட்டியது. ஆனால் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார் அவர்.
மேட்ச் வின்னராக ஜொலித்தார்
இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டியிலும் அதிரடியாக அரை சதம் அடித்த அவர் மேட்ச் வின்னராகவும் ஜொலித்தார். இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 204 ரன்கள் விளாசி தள்ளினார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் காரணமாக 27 இடங்கள் முன்னேறி, 18-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதே வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 15-வது இடத்துக்கு சென்று சரிவை சந்தித்துள்ளார்.நீண்ட காலம் முதல் 10 இடங்களுக்குள் இருந்த விராட் கோலி, இதில் இருந்து வெளியேறுவது இதுவே முதன்முறையாகும்.
புவனேஷ்வர் குமார் எந்த இடம்?
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளில் 50 ரன்கள் மட்டுமே விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் 2 இடங்கள் சரிந்து 13-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய அணியில் கே.எல்.ராகுல் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள்(10-வது இடம்) இருக்கிறார். பந்துவீச்சு ரேங்கில் புவனேஷ்வர் குமார் இலங்கைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 3 இடங்கள் உயர்ந்து 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
"எது ரெய்னா ஐபிஎல் ஆட போறாரா?.." ட்விட்டரில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்'.. பின்னணி என்ன?