"ரெய்னா SOLD TO 'CSK'.." ஐபிஎல் ஏலத்தை RECREATE செய்த ஹூக்.. "புண்படுத்திட்டே இருக்கீங்களே.." மனம் வருந்திய ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர், இந்த முறை 10 அணிகளுடன், மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகலாம் என கூறப்படுகிறது.

இதற்கான ஏலமும், கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், பெங்களூரில் வைத்து நடந்து முடிந்தது.
இதில், ஏலத்தில் இடம்பெற்றிருந்த 10 அணிகளும், பல சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து அசத்தியிருந்தனர். நட்சத்திர வீரர்களை அணியில் சொந்தமாக்க, சில அணிகள் மாறி மாறி, கடுமையாக மோதிக் கொண்டது.
சிஎஸ்கே எடுத்த முடிவு
இப்படி பல விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்ய சம்பவங்களும், ஐபிஎல் ஏலத்தின் போது நிகழ்ந்திருந்தது. இந்நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எடுத்த சில முடிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் விமர்சனத்தினை சந்தித்திருந்தது. பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட சீனியர் வீரர்களை மீண்டும் தேர்வு செய்த சிஎஸ்கே அணி, Mr. IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை அணியில் சேர்க்க முயற்சி செய்யவில்லை.
'Mr. IPL' ரெய்னா
சிஎஸ்கே மட்டுமில்லாது, வேறு எந்த அணிகளும் ரெய்னாவை எடுக்க முயலாததால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்திருந்தது. ஐபிஎல் தொடரின் நம்பர் 1 வீரரான ரெய்னா, ஐபிஎல் தொடரில் களமிறங்காமல் போவதால், சிஎஸ்கேவை ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
வருத்தத்தில் ரசிகர்கள்
தொடர்ந்து, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்பது பற்றி, சிஎஸ்கே அணி தரப்பில் இருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், இந்த தடவை ரெய்னாவை ஐபிஎல் போட்டிகளில் பார்க்க முடியாது என்பதால், சிஎஸ்கே அணிக்காக ரெய்னா வென்று கொடுத்த போட்டிகள் தொடர்பான வீடியோக்கள் மதுரம் புகைப்படங்களை, ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
ஹூக் எட்மீட்ஸ்
இந்நிலையில், போட்டியின் ஏலதாரர் ஹுக் எட்மீட்ஸ், 'Behindwoods' சேனலுக்கு அளித்த Exclusive பேட்டியில், ரெய்னா குறித்து Recreate செய்த விஷயம், அவரது ரசிகர்களை மீண்டும் மனம் வருந்தச் செய்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தை முதல் நாள் நடத்தி வந்த ஹூக் திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்தார். தொடர்ந்து, அவருக்கு பதிலாக, சாரு ஷர்மா ஏலத்தை நடத்தினார். பிறகு இரண்டாம் நாளின் கடைசி சுற்றின் போது, மீண்டும் வந்த ஹுக், ஏலத்தை முடித்து வைத்திருந்தார்.
ஐபிஎல் ஏலம் 'Recreation'
அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது 'Behindwoods' சேனலுக்கு, பிரத்யேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர், ரெய்னாவை சிஎஸ்கேவில் எடுப்பது போல, ஐபிஎல் ஏலத்தை Recreate செய்ய முடியுமா என ஹூக்கிடம் கேட்டார்.
அப்போது, ஹூக், ரெய்னாவின் பெயரைச் சொல்லி, அவரை சிஎஸ்கே அணி, இறுதியில் 5.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுப்பது போல, இறுதியில் செய்து முடித்தார். ஏற்கனவே, ரெய்னா இல்லாததால், வருத்தத்தில் உள்ள சிஎஸ்கே ரசிகர்கள், ஹூக் ரெய்னாவின் ஏலத்தினை Recreate செய்த வீடியோவைக் கண்டு, வருத்தம் அடைந்துள்ளனர். இன்று அவர் பேசியது, ஏலத்தன்று நடந்திருந்தால், எப்படி இருந்திருக்கும் என்றும் சோகத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முழு வீடியோவைக் காண :

மற்ற செய்திகள்
