VIDEO: பேட்டிங் பண்ற ‘அவசரத்துல’ அப்டியேவா வர்ரது.. அடக்கமுடியாமல் ‘சிரித்த’ ரோஹித்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 17, 2020 07:17 PM

ஐபிஎல் தொடரின் 32-வது போட்டி நேற்று (16.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.

MI Quinton de Kock comes out to bat in training pant

இப்போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் ஷ்ர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

MI Quinton de Kock comes out to bat in training pant

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், கேப்டன் இயான் மோர்கன் 39 ரன்களை எடுத்தனர். இதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும், ஹர்திக் பாண்டியா 21 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

MI Quinton de Kock comes out to bat in training pant

இந்நிலையில் நேற்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். அப்போது பயிற்சியின் போது அணியும் பேண்டை அணிந்துகொண்டு டி காக் களமிறங்கினார். இதனை அவர் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால் ரோஹித் ஷர்மா முன் சென்றதும் தான் பயிற்சி பேண்ட் உடன் வந்திருப்பதை டி காக் உணர்ந்தார்.

அதன்பிறகு தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை எடுத்து வெளியில் விட்டார். இதனை கண்ட ரோகித் சர்மா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே நடந்தார். இருப்பினும் அந்த பேண்டை அணிந்துகொண்டு டி-ஷர்ட்டை இறக்கி விட்டு டி காக் பேட்டிங் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MI Quinton de Kock comes out to bat in training pant | Sports News.