'10-வது ரவுண்டில் நடந்த அந்த நாக்-அவுட்!'... கலங்கவைத்த குத்துச்சண்டை வீரரின் மரணம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Oct 18, 2019 10:30 PM
அமெரிக்கா குத்துச் சண்டை வீரர் குத்துச் சண்டை ரிங்கிலேயே மரணமடைந்தது கண்கலங்க வைத்துள்ளது.

சிகாகோவில் கடந்த சனிக்கிழமை நடந்த யுஎஸ்பிஏ குத்துச் சண்டை போட்டியில், நியூயார்க்கைச் சேர்ந்த முன்னாள் கிளவுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவுடன், ஒலிம்பிக் சாம்பியன் கான்வெல் இருவரும் மோதிக்கொண்டபோது 10-ஆவது ரவுண்டில் கான்வெல்லின் நாக்-அவுட்டில் பேட்ரிக் திடீரென மயங்கி விழுந்தார். அரங்கமே அதிர்ந்திருந்த அந்த வேளையில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு, அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். ஆனால் அடுத்த 4 நாட்களில் கோமா நிலைக்குச் சென்ற பேட்ரிக் டே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Keep him in your prayers!! #prayforpatrickday pic.twitter.com/4euBCe1Yap
— Charles Conwell (@CharlesConwell) October 13, 2019
2013-ஆம் ஆண்டு தொடங்கி, 2019 வரையிலான சாம்பியன்ஷிப்களை வென்ற பேட்ரிக்கின் மரணம் குறித்து பேசிய கான்வெல், ‘பேட்ரிக் எனக்கு தெரியும் நீ ஒரு போராளி, நான் செல்லும் இடத்தில் எல்லாம் உன்னையே பார்க்கிறேன். நான் கேட்பதும் உன்னைப் பற்றிய அற்புதமான விஷயங்கள்தான். குத்துச் சண்டையை விட்டு நான் விலகுவதையும் நீ விரும்பவில்லை என தெரியும், ஆனால் உன்னைக் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
