"எங்ககிட்ட இழக்குறதுக்கு ஒண்ணுமில்ல.. அன்னைக்கி 'பிரஷரே' இந்தியா டீம்'க்கு தான்.." கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான 'மேட்ச்'!.. நினைவு கூர்ந்த 'பெர்குசன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jun 03, 2021 08:52 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

all the pressure is on india in wc 2019 semi finals says ferguson

டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதவுள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. மேலும், இந்த போட்டிக்காக இரு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் மோதியது குறித்து, நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த லாக்கி பெர்குசன் (Lockie Ferguson) சில விஷயங்களை தற்போது மனம் திறந்துள்ளார்.

இந்த போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. குறைந்த ரன்களே நியூசிலாந்து அணி நிர்ணயித்த போதும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இது பற்றி பேசிய லாக்கி பெர்குசன், 'நான் விளையாடிய மிகவும் அதிசயமான விளையாட்டுகளில் அதுவும் ஒன்று. அந்த போட்டி, மழையின் காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த நாங்கள், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்தோம்.

நாங்கள் 240 ரன்கள் அடித்தாலே, அது போதுமான இலக்கு என்று தான் நினைத்திருந்தோம். ஆனால், இந்திய அணியைப் பொறுத்தவரையில், அவர்களின் பேட்டிங் லைன் அப்பைக் கருத்தில் கொண்டு, நிறைய ரன்கள் அடிக்கவில்லை என்று அவர்கள் உணர்வதையும் நாங்கள் அறிந்து கொண்டோம். அன்றிரவு, எங்களது பேட்டிங் முடிந்து இரவு தூங்கும் போது, எனது காதலி என்னுடன் இருந்தாள்.

நாங்கள் போட்டி பற்றி பேசிக் கொண்டிருந்த போது, அவள் என்னிடம், "நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்களா?" என என்னிடம் கேட்டார். அப்போது  நான், "எங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், நாங்கள் ரன்களை அடித்து முடித்து விட்டோம். இனி எல்லா அழுத்தங்களும் இந்தியா மீது உள்ளன' என கூறினேன்.

'போல்ட் மற்றும் மேட் ஹென்ரி ஆகியோர் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்து வீசி, இந்திய அணியின் தொடக்க விக்கெட்டுகளை சாய்த்து, நெருக்கடி கொடுத்தனர். அந்த போட்டியில், வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றது என்பது, மிகவும் சிறப்பு வாய்ந்தது' என லாக்கி பெர்குசன் பழைய நினைவுகளை பகிர்ந்திருந்தார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. All the pressure is on india in wc 2019 semi finals says ferguson | Sports News.