"தன் மனைவியால் சிக்கிய கணவன்"!... கணவரின் ஊழலை வெளியில் சொன்ன மனைவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | May 05, 2019 01:24 PM
போலி ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கடை ஊழியர் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது நகரை சேர்ந்த குமரேசன் என்பவர் பழனியாண்டவர் நகரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ரேஷன் கடையில் குமரேசன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அவரது மனைவி ரெங்கநாயகி அம்பலப்படுத்தியுள்ளார்.
இதில், குறிப்பாக போலி ஸ்மார்ட் கார்டுகளை தயாரித்து, அதன் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை குமரேசன் கள்ள சந்தையில் விற்பனை செய்வதாகவும். மேலும், பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையை அதிகாரிகளின் துணையுடன் குமரேசன் கையாடல் செய்ததாகவும் ரெங்கநாயகி கூறியுள்ளார்.
அதன்படி, சுமார் 5 லட்சம் ரூபாய் வரை குமரேசன் கையாடல் செய்ததாகவும். மேலும், குமரேசன் தமது வீட்டில் நூற்றுக்கணக்கான போலி ஸ்மார்ட் கார்டுகளை பதுக்கி வைத்திருப்பதையும் அவர் காட்டியுள்ளார். இந்நிலையில், இது குறித்து காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரெங்கநாயகி வலியுறுத்தியுள்ளார்.