'அந்த பெயரை அழைக்கும் போதெல்லாம் அதிர்ந்த ஒட்டு மொத்த யூனிவர்சிட்டி'... 'ஒரு மாணவருக்கு இத்தனை தங்க பதக்கங்களா'?... வாயடைத்து போன பேராசிரியர்கள்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Jeno | Apr 08, 2021 09:24 AM

ஒரு மாணவன் வாங்கிய தங்கப்பதக்கங்களைப் பார்த்து மொத்த பல்கலைக்கழகமும் வாயடைத்துப் போனது.

Farmer\'s son reaps 14 gold medals at University of Horticultural

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இவர்கள் விவசாயம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் பிரசாந்த்  மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்சி. தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவர் பல்கலைக்கழகம் நடத்திய அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்நிலையில் பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது மேடை ஏறிய பிரசாந்த் 14 தங்கப்பதக்கங்களை வாங்கி குவித்தார். அவரது பெயரை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பல்கலைக்கழக அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.

பிரசாந்த் பதக்கங்களைப் பெற்றதும் அவரது தாய் வசந்தாவும், தாத்தா சென்னேகவுடாவும் மேடையில் ஏறி அவருக்கு முத்தமழை பொழிந்தனர். மேலும் ஆனந்தக் கண்ணீரில் திளைத்தனர். இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், ''எனது குடும்பம் விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தின் மீது எனக்குச் சிறு வயது முதலே ஆர்வம் வந்தது. இதனால் விவசாயத்தில் சாதிக்க விரும்பினேன்.

Farmer's son reaps 14 gold medals at University of Horticultural

விவசாயத்தில் பலரும் பாரம்பரியமாக ஒரே பயிரைச் சாகுபடி செய்து வருகிறார்கள். இது பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாய விஞ்ஞானியாக மாறுவதே எனது குறிக்கோள். மேலும் எனது படிப்பிற்காகத் தந்தை வங்கியில் வாங்கிய  ரூ.2.40 லட்சம் கடன் உள்ளது. அதையும் விரைவில் அடிப்பேன்'' என நம்பிக்கையுடன் கூறினார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Farmer's son reaps 14 gold medals at University of Horticultural | Inspiring News.