அதிக வயசுல பாராசூட் பயணம்.. கின்னஸ் சாதனை படைத்த பாட்டி.. இந்த வயசுலயா இப்படி ஒரு சம்பவம் பண்ணாங்க? திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > கதைகள்சுவீடன் நாட்டைச் சேர்ந்த 103 வயதான மூதாட்டி ஒருவர் பாராசூட்டில் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சிலருக்கு உயரமான இடங்களை கண்டால் அச்சம் ஏற்படும். இன்னும் சிலர் இமயமலையையே ஏறி கடந்துவிடலாம் என நினைப்பார்கள். இத்தகைய முயற்சிகளுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ரட் லார்சன் என்னும் மூதாட்டி. இவருடைய வயது 103 வருடங்கள் மற்றும் 259 நாட்களாகும்.
நீண்ட நாள் ஆசை
பாராசூட்டில் பயணிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை தனக்கு இருந்ததாக கூறும் லார்சன், அந்த ஆசையை நிறைவேற்ற துடித்துள்ளார். இதன்மூலம், சுவீடன் நாட்டில் உள்ள மோடாலா என்னும் பகுதியில் தனது கனவை நனவாக்கியுள்ளார் லார்சன். பாராசூட் பயணத்தில் கைதேர்ந்த குழு ஒன்று லார்சனுக்கு உதவியிருக்கிறது. சிறிய ரக விமானத்திலிருந்து ஆகாயத்தில் பறந்த லார்சன் பாராசூட் மூலமாக பத்திரமாக தரையிறங்கியதை அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கொண்டாடினர்.
லார்சனின் இந்த முயற்சிக்கு அவரது குடும்பம் ஆதரவாக இருந்திருக்கிறது. இதுகுறித்து அவர் பேசுகையில்," நான் பாராசூட்டில் பறப்பது குறித்து பலநாட்களாக சிந்தித்திருக்கிறேன். என்னுடைய நீண்டநாள் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. எல்லா செயல்களும் திட்டமிட்டபடி நடந்தன" என்றார்.
உலக சாதனை
இதன்மூலம் மிக அதிக வயதில் பாராசூட்டில் பயணித்த பெண்மணி என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் லார்சன். முன்னதாக 103 வருடங்கள் 181 நாட்கள் வயதான பெண்மணி ஒருவர் தான் உலகின் மிக அதிக வயதில் பாராசூட் பயணம் மேற்கொண்டவராக இருந்தார். தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளார் லார்சன்.
இந்த மாத துவக்கத்தில் ரேமாண்ட் சல்லிவன் என்னும் பெண்மணி தன்னுடைய 100வது பிறந்தநாளில் பாராசூட் பயணம் மேற்கொண்டார். உலகம் முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் செவிலியராக பணியாற்றிய சல்லிவன், ஆரம்பத்தில் இந்த பயணம் அச்சம் தருவதாக இருந்தாலும் பின்னர் அதனை தான் விரும்பியதாக தெரிவித்தது பலரையும் வியப்படைய செய்தது.