' ஒரு நிமிஷத்துல ஒண்ணு எழுதினேன்...' '2020 நிமிடத்திற்குள் 2020 கவிதைகள்...' கின்னஸ் சாதனை செய்து அசத்திய வாலிபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை சேர்ந்த கதிர் வேல் என்ற இளைஞர் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை செய்து அப்பகுதி மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளார்.

சுந்தர்ராஜ், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை அடுத்து உள்ள ஜடை கிராமத்தில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை, கதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம். குடும்ப சூழ்நிலைகள் காரணமாக சுந்தர் ராஜ் தன்னுடைய திறமைகளை முழுவதும் வெளிப்படுத்த முடியாமல் போனது.
சிறுவயது முதல் கதிர் வேலுக்கு, புத்தகம், இலக்கியத்தின் மீது அளவு கடந்த காதல் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த சுந்தர் ராஜ் தன் மகனுக்கு அவரால் முடித்த அனைத்து உதவிகளை செய்தும், ஊக்கப்படுத்தியும் வந்துள்ளார். கிராம மக்கள் கேட்ட நிமிடத்தில் கவிதை எழுதி கொடுத்து புகழ்பெற்றவர் கதிர் வேல்.
தன்னுடைய இந்த கவிதை எழுதும் திறமையை வைத்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதியுள்ளார். அவருடைய படைப்பை ஏற்ற கின்னஸ் அமைப்பு கதிர் வேல் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்த்து அவரது திறமையை அங்கீகரித்துள்ளது.
கதிர் வேல் திரைப்பட துறையில் பாடல் எழுத முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
