'இனிமேல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை'... வெளியான முழு பட்டியல் இதோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 16 நாடுகளின் பட்டியலை மாநிலங்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
![Visa-Free Entry To Indian Passport Holders In 16 Countries Visa-Free Entry To Indian Passport Holders In 16 Countries](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/visa-free-entry-to-indian-passport-holders-in-16-countries-1.jpg)
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்கள் அன்று தொடங்கியது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கான விசா குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அதில் பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு 43 நாடுகளில் வருகையின் போது உடனடி விசா வழங்கப்படுகிறது. இதில் ஈரான், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். 36 நாடுகளில் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். இந்நிலையில் 16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.
அதில், ''பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ'' உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா-வருகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)