"பையன் வாயில ஏதோ இருந்துச்சு",,.. போய் 'என்ன'ன்னு பாத்த 'அம்மா'வுக்கு,,.. காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள போலாப்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகே நின்ற போது, எதையோ விழுங்கியதை அவரது தாயார் கண்டுள்ளார்.

மகனின் வாயில் என்ன இருக்கிறது என்று ஓடி வந்து பார்த்த தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் தவறுதலாக குட்டி பாம்பு ஒன்றை தெரியாமல் கடித்ததாகவும், குட்டி பாம்பு என்பதால் அது உடனடியாக உயிரிழந்து போனதையும் கண்டு தாயார் அதிர்ச்சியடைந்தார். தாய் வந்து பார்ப்பதற்குள் அந்த சிறுவன் சிறிய அளவில் பாம்பை விழுங்கியுள்ளான். அந்த பாம்பை வாயில் இருந்து எடுத்த நிலையில், உடனடியாக சிறுவனை மருத்துவமனை கொண்டு சேர்த்தனர். அங்கு வைத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறுவன் கடித்ததால் இறந்த ஆறு இன்ச் பாம்பின் பாகங்களையும் சிறுவனின் தந்தை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார். சிறுவனுக்கு விஷ தடுப்பு இன்ஜெக்ஷன் போடப்பட்டது. சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், அந்த பாம்பு மிகவும் விஷத்தன்மை உடையது என்றும், ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அழிக்கப்பட்டதால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
