"அவரு கிட்ட போறவங்களுக்குதான் மனநோயே வரும்! இது தற்கொலை இல்ல!".. 'அதிரவைத்த' பிக்பாஸ் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 23, 2020 10:36 PM

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்கிற கோணத்தில் முன்னதாக விசாரணை நடத்தும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Sushant\'s Psychiatrist all patients with Bipolar Disorder,payalrohatgi

முன்னதாக சுஷாத் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளும், நடிகர்களும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.  இதனிடையே பாலிவுட்டில் சில அரசியல் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதேபோல் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியும் விசாரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத், மனநல மருத்துவர் கர்சி சாவ்டா என்பவரிடம் சிகிச்சை பெற்றதாகவும், அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத், தன் முன்னாள் காதலியான, அங்கிதா லோகாந்தே பிரிந்தது தவறு என்று தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல சுஷாந்த்துக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருந்ததாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சுஷாந்த்தின் மனநல மருத்துவர் கர்சி சாவ்டா, போலீஸில் அளித்த இந்த தகவலில் உண்மை இல்லை என்று ஹிந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிக்பாஸ் இரண்டாம் பாக பிரபலம் பாயல் ரொஹத்கி சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வீடியோவில்,  “இயக்குனர் திவாகர் பானர்ஜி தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை டாக்டரிடம் அனுப்பினார். ஆனால் கர்சி சாவ்டா தன்னிடம் வரும் அனைவருக்கும் பைபோலார் டிஸ்ஆர்டர் இருப்பதாக கூறுகிறார். நானும் ஒரு முறை கர்சி சாவ்டாவை சந்திக்கச் சென்றேன். ஆனால் அவர் தன்னிடம் வரும் அனைவருக்கும் அவர் மன அழுத்தம் என்று கூறுகிறார். அவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டால் அது மேலும் மக்களை மன வருத்தம் கொள்ளச் செய்கிறது என்பதை உணர்தேன். அவர் ஒரு போலி டாக்டர். சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அது கொலை. இதுகுறித்த விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushant's Psychiatrist all patients with Bipolar Disorder,payalrohatgi | India News.