அம்மாகிட்ட போய் என்ன 'கொன்னுட' சொன்னாங்க.. அசுர வளர்ச்சி.. அடுத்தது பாலிவுட்ல பயோபிக்.. யார் இந்த ரியல் ஹீரோ?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 25, 2022 02:51 PM

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பார்வையற்ற நபராகிய பொல்லா என்பவர் இந்தியாவில் உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகளாவிய தலைவர்கள் 2021 பட்டியலில் இடம்பிடித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Srikanth bolla tops WEF\'s Young Global Leaders 2021 list

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தின் சீதாராமபுரத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு பொல்லா என்பவர் பிறந்துள்ளார். பிறக்கும்போதே பார்வையற்றவராகப் பிறந்த அவரை கொன்றுவிடும்படி அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். ஆனால், இதைப் புறக்கணித்து, அவரது பெற்றோர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

பொறியாளராக ஆக வேண்டும் என்ற கனவு:

தனது 12-வது வயதில் அறிவியல் படிப்பை தொடர நினைத்தபோது, அவர் பார்வையற்றவர் என்ற காரணத்தால், பள்ளி அவரை அனுமதிக்கவில்லை. ஆனால் பொல்லாவின் கனவே பொறியாளராக ஆக வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கு அறிவியல் மற்றும் கணிதம் படிக்க வேண்டும்.

Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list

ஸ்ரீகாந்த் படித்த பள்ளி ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டது, அங்கு, பார்வையற்ற மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் கற்பிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ஸ்ரீகாந்த மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஸ்வர்ணலதா என்ற ஆசிரியர் மனம் தளராமல், ஒரு வழக்கறிஞரைக் கண்டுபிடித்து, பள்ளி நிர்வாகக் குழுவின் ஆதரவுடன், பார்வையற்ற மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியலைப் படிக்க அனுமதிக்கும் கல்விச் சட்டத்தை மாற்றக் கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list

அதுமட்டுமில்லாமல், ஹைதராபாத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி பார்வையற்ற மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை வழங்குவதாக கேள்விப்பட்டு அங்கு சேர்ந்து படித்தார். மேலும், தொட்டுணரக்கூடிய வரைபடங்களை எப்படி வரைய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தனர்.

Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list

அதுமட்டுமில்லாமல் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் தனது வழக்கில் வெற்றி பெற்றதாக நீதிமன்றத்தில் இருந்து செய்தி வந்தது. ஸ்ரீகாந்த் விரைவில் மாநில வாரியப் பள்ளிக்குத் திரும்பி அவருக்கு விருப்பமான கணிதம் மற்றும் அறிவியலைப் படித்தார், அவரது தேர்வுகளில் சராசரியாக 98% பெற்றார்.

முதல் சர்வதேச பார்வையற்ற மாணவர்:

அதோடு, ஐஐடிகள் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) எனப்படும் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் அவரை மறுத்ததால், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தார். ஸ்ரீகாந்த கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் உள்ள MIT இல் சேர்ந்து, முதல் சர்வதேச பார்வையற்ற மாணவர் ஆனார்.

Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list

அவர் படிக்கும் போதே ஹைதராபாத்தில் இளம் ஊனமுற்றோருக்கு பயிற்சி அளிக்கவும், கல்வி கற்பதற்காகவும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சமன்வாய் மையம் என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தையும் தொடங்கினார். அவர் திரட்டிய பணத்தில் பிரெய்லி நூலகத்தையும் திறந்தார்.

போராட்ட வாழ்க்கை:

இதுகுறித்து கூறிய அவர், 'வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் நான் மிகவும் போராட வேண்டியிருந்தது, ஆனால் எல்லோரும் என்னைப் போல போராட முடியாது அல்லது என்னைப் போன்ற வழிகாட்டிகளைக் கொண்டிருக்க முடியாது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. நாம் ஏன் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது? என நினைத்தேன்' எனக் கூறியுள்ளார்.

Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list

வாழ்க்கையில் நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள்?

2006 இல், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஒரு உரையின் போது உரையாற்றிய மாணவர்களில் அவரும் ஒருவர். 'வாழ்க்கையில் நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள்?' என்ற கலாமின் கேள்விக்கு, 'இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக நான் இருக்க விரும்புகிறேன்' என  ஸ்ரீகாந்த் பொல்லா பதிலளித்திருந்தார்.

Lucknow Super Giants'.. இதுதான் எங்கள் அடையாளம்.. பெயரை வெளியிட்ட ஐபிஎல் அணி.. CSK கொடுத்த தரமான ரிப்ளை

2012 ஆம் ஆண்டில், பொல்லா பொல்லான்ட் இண்டஸ்ட்ரீஸைத் தொடங்கிய நிலையில், 2018 இல் 150 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முடிந்தவரை பல ஊனமுற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஏப்ரல் 2017 இல், ஆசியா முழுவதிலும் உள்ள 30 வயதுக்குட்பட்ட 30 பேர் கொண்ட ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் மூன்று இந்தியர்களில் ஒருவர் தான் ஸ்ரீகாந்த். மேலும், கடந்த ஆண்டு, 30 வயதில், ஸ்ரீகாந்த் உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகளாவிய தலைவர்கள் 2021 பட்டியலில் இடம்பிடித்தார்.

Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list

பாலிவுட்டிலும் அழைப்பு:

ஸ்ரீகாந்த்திற்கு தற்போது பாலிவுட்டிலும் அழைப்பு வந்ததுள்ளது. பிரபல நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கும் வாழ்க்கை வரலாற்று படம் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தன்னை முதலில் சந்திக்கும் போது மக்கள் தன்னை குறைத்து மதிப்பிடுவதை அது நிறுத்தும் என்று ஸ்ரீகாந்த் நம்புகிறார்.

VIDEO: கெட்ட வார்த்தையால் பத்திரிக்கையாளர்களை திட்டிய ஜோ பைடன்.. மைக் ஆஃப்ல இருக்குனு நினைச்சு வார்த்தைய விட்டுட்டாரு.. டிரெண்டிங் ஆகும் வீடியோ!

ஆரம்பத்தில் என்னை பார்க்கும் மக்கள், 'ஓ, அவர் பார்வையற்றவர். பாவம் என பரிதாபப்படுபவர்கள், நான் யார், நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய தொடங்கும் தருணத்தில் எல்லாம் மாறிவிடும் என்று கூறினார்.

Tags : #SRIKANTH BOLLA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Srikanth bolla tops WEF's Young Global Leaders 2021 list | India News.