‘போன் பேசவோ, பாக்கவோ விட மாட்றாங்க.. இதுக்கெல்லாம் இங்க இருக்குற மக்கள் பணிய மாட்டாங்க’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 07, 2019 01:52 PM

ஆர்ட்டிக்கிள் 370 என்கிற, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இந்திய யூனியன் பிரதேச ஒருங்கிணைப்புக்குள் அம்மாநிலத்தை கொணரும் புதிய மசோதாவை பாஜக-வின் தலைமையிலான ஆளும் மத்திய அரசு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒப்புதலுடன் நிறைவேற்றியது.

solitary confinement, Not allowed to talk, Muftis Daughter

அதுமட்டுமல்லாது காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும் இதனூடே சேர்த்து நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் முதலில் ஹவுஸ் அரஸ்ட் செய்யப்பட்டும், பிறகு அரசின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டுமுள்ளனர்.

இதுபற்றி என்டிடிவி சேனலுக்கு மெஹபா முஃப்தியின் மகள் இல்திஜா ஜாவேத் அளித்த பேட்டியின்படி, அரசு விருந்தினர் மாளிகையான ஹரி நிவாஸில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனது தாயார் தன்னுடனும், வழக்கறிஞர்களுடனும் போனில் கூட பேச முடியாதபடி வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களயே இப்படி நடத்தமுடியும் என்றால், காஷ்மீரிகளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை எச்சரிக்கும் வகையில் இதைச் செய்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

மேலும் பேசியவர், ‘எனது அம்மாவை சிறைவைத்திருப்பதால் சொல்லவில்லை, உண்மையில் தாங்கள் செய்த தவறை ஒருநாள் இந்திய அரசு உணரும் என்றும், இந்த அழுத்தத்துக்கெல்லாம் இங்குள்ள (காஷ்மீர்) மக்கள் அடிபணியப் போவதில்லை என்பதையும் இந்திய அரசு விரைவில் புரிந்துகொள்ளும்’ என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags : #ARTICLE370REVOKED #ARTICLE370 #KASHMIRINTEGRATED #MEHBOOBAMUFTI