Jail Others
IKK Others
MKS Others

'நான் ஒரு வீரரோட மனைவி...' 'புன்னகை'யுடன் கணவருக்கு பிரியாவிடை...! - உள்ளத்தை 'உருக' செய்த நிகழ்வு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Dec 11, 2021 01:19 PM

நான் என் கணவரை கண்ணீருடன் வழியனுப்பி வைக்கமாட்டேன் என குன்னூர் விமான விபத்தில் உயிரிழந்த வீரரின் மனைவி பேசியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

smiling send-off Brigadier Lakhbinder Singh Lidder’s wife

இந்திய இராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் உயரதிகாரிகள்  உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கி வெடித்தது. அதே ஹெலிகாப்டரில் தான் தளபதி பிபின் ராவத் அவர்களின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிட்டர் என்பவரும் பயணம் செய்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிட்டர் உடலுக்கு நேற்று டெல்லியில் இறுதிச் சடங்கு நடைபெற்ற நிலைஇய அதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டார்.

smiling send-off Brigadier Lakhbinder Singh Lidder’s wife

பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிட்டருக்கு, கீதிகா என்ற மனைவி, 16 வயதில் ஆசனா என்ற மகளும் இருக்கின்றனர்.

நேற்று தன் கணவரின் இறுதி சடங்கின் போது, கீதிகா தனது கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியில் முத்தமிட்டு வீரப் புன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தார். அவரது மகள் ஆசனா கைகளில் நிரப்பி வைத்திருந்த ரோஜா இதழ்களை விரல்களின் வழியே சிதறவிட்டு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய கீதிகா' என் கணவர் மிக சிறந்த மனிதர். அதனால் தான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இங்கு எத்தனை பேர் வந்துள்ளனர்.

இந்த நிமிடத்தில் பெருமிதத்தையும் விட சோகமே மேலோங்குகிறது. இருந்தாலும் நான் ஒரு வீரரின் மனைவி. அதனால் அவருக்கு புன்னகையுடன் நல்லதொரு பிரியாவிடை கொடுக்க விரும்புகிறேன்.

அவர் இல்லாத எங்களுடைய எதிர்காலம் மிகவும் நீண்டதாகத் இருக்கும். எதுவாக இருந்தாலும் கடவுள் தந்த பாதையில், இந்த இழப்பை ஏற்றுக் கொண்டு நாங்கள் வாழ வேண்டும். எங்களுடைய மகள் தன் தந்தையை ரொம்பவே இழந்து தவிப்பாள்' என மெல்லிய குரலில் பேசினார்.

smiling send-off Brigadier Lakhbinder Singh Lidder’s wife

அதோடு பிரிகேடியர் லக்வீந்தர் சிங் மகள் பேசும் போது, 'என் அப்பா தான் என்னுடைய பெஸ்ட் பிரண்ட். அவர் தான் எனக்கு கதாநாயகர். என் நண்பர் இப்போது இல்லாதது எனக்கு மட்டுமல்ல தேசத்துக்கே பேரிழப்பு.

என்னுடைய வாழ்நாளில் 16 வருடம் அவருடன் வாழ்ந்துவிட்டேன். இனி அந்த இனிமையான நினைவுகள் என்னுடன் இருக்கும். வாழ்க்கை இனி நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்' எனக் கூறினார்.

Tags : #BRIGADIER LAKHBINDER SINGH LIDDER #SMILING #SEND-OFF #ஹெலிகாப்டர் #பிரிகேடியர் லக்வீந்தர் சிங் லிட்டர்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Smiling send-off Brigadier Lakhbinder Singh Lidder’s wife | India News.