'கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசியை...' 'தினமும் 7 கோடி டோஸ் தயாரிக்க இருக்கிறோம்...' - இந்திய மருத்துவ நிறுவனம் அதிரடி அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 24, 2020 10:39 AM

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை, தினமும் 7 கோடி ‘டோஸ்’ அளவில் தயாரிப்போம் என இந்திய மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியுட் அறிவித்துள்ளது.

serum institute corona vaccine seven crores dose daily

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை முதல்கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயார் செய்ய இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ஆயிரம் ரூபாய்க்கு  குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை தளங்களாக பல்வேறு இடங்களுடன் சேர்த்து மும்பை, புனேயையும் பட்டியலிட்டிருக்கிறோம். இந்த நகரங்களில் கொரோனா தீவிர பரவலை கொண்ட பல இடங்கள் உள்ளன. இது எங்கள் தடுப்பூசியின் செயல்திறனை அறிந்து கொள்ள முடியும்.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இலக்கு வைத்துள்ளோம்.

அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் எங்கள் நிறுவனம், நூறு கோடி டோஸ்களை இந்தியாவுக்காக தயாரிக்க முடியும். தடுப்பூசிகளை ஊருவாக்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்க இருக்கிறோம்.

எங்கள் நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல்களைப் பெற்றதும் தயாரிப்பினை தொடங்க இருக்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Serum institute corona vaccine seven crores dose daily | India News.