‘தேநீர்ல 4 சொட்டு கலந்து, 30-40 நிமிஷம் அவர குடிக்க வைச்சுடுங்க’.. நடுங்க வைக்கும் ‘ரியா’வின் வாட்ஸ்-ஆப் உரையாடல்கள்! சூடு பிடிக்கும் சுஷாந்த் வழக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஜூன் 14-ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பான எழுந்த சர்ச்சைகளை அடுத்து, அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக, அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடல்களை சிபிஐ ஆய்வு செய்தத்தில், அந்த நடிகை போதைப்பொருள் பயன்படுத்தியதும், அவருக்கும் போதை கும்பலுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
ரியா சக்போர்த்தியின் போனில் இருந்து பலருக்கும் அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அவரது உரையாடல்களில் இருந்து எம்.டி.எம்.ஏ, மரிஜுவானா உள்ளிட்ட போதைப்பொருட்களை ரியா அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அப்படி ஒரு உரையாடலில், கவுரவ் அய்ரா என்கிற போதைப்பொருள் வியாபாரியிடம், “நாங்கள் கடினமான போதை மருந்துகளை வெகுவாக எடுத்துகொள்வது இல்லை. ஒரே ஒரு முறை எம்.டி.எம்.ஏவை முயற்சித்தது உண்டு", "உங்களிடம் எம்.டி உள்ளதா?" என ரியா கேட்கிறார். இன்னொரு உரையாடலில், ரியா 'மிராண்டா சுஷி' எனும் ஒருவர், “ஹாய் ரியா, பொருள்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன” என்று கூறுகிறார். மிராண்டா பின்னர் ரியாவிடம் “ஷோய்கினின் நண்பரிடம் (ரியாவின் சகோதரர்) இதை வாங்கிக் கொள்ளலாமா? ” என கூறியுள்ளார்.
இதேபோல், ரியாவுக்கும் அவரது நண்பர் ஜெயா சஹாவுக்கும் நவம்பர் 25, 2019 அன்று நடந்த உரையாடலில், ஜெயா, ரியாவிடம், “தேநீர் அல்லது சுடு நீரில் 4 சொட்டுகளை விட்டு, அதை அவரை குடிக்க விடுங்கள் ... கிக் ஏறுவம் வரை 30-40 நிமிடங்கள் கொடுங்கள்" என கூறியுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதற்கு ரியா, “மிக்க நன்றி” என்று கூற, பதிலுக்கு ஜெயா “பிரச்சனை இல்லை ப்ரோ, அது உதவும் என நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.
இதனிடையே நடிகை ரியா சக்ரபோர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி என்று தானே கூறிக்கொண்டார் என்றும், 2019 நவம்பரில், அவர் சுஷாந்துடன் அவரது பாந்த்ரா இல்லத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சுஷாந்தின் மரண வழக்கின், பின்னணியில் உள்ள இந்த 'போதை மருந்து சதி' முழுமையாக வெளிவந்த பின்னர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) இந்த வழக்கில் விசாரணைகளைத் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.