“ரகுல் ப்ரீத் சிங் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்!” - போதைப்பொருள் வழக்கில் அதிகாரிகள் விசாரணை.
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் மும்பையில் விசாரணையைத் தொடங்கினர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில், போதைப்பொருள் வாங்கி கொடுத்த புகாரில் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது தோழிகளான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரதா கபூர், சாரா அலி கான் உள்ளிட்ட நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அனுப்பிய சம்மனை ஏற்று ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நடிகை ரியாவுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதுல் ரியா சென்று வந்த இடங்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவை தொடர்பான பல தகவல்களை அதிகாரிகள் விசாரித்தனர்.
இதற்கு பதிலளித்த ரகுல் ப்ரீத் சிங், ரியாவுடனான தொடர்புகளும், போதைப் பொருட்கள் தொடர்பான உரையாடல்களும் உண்மைதான் என கூறியதுடன், அதே சமயம் தனக்கும் போதைப்பொருள் கும்பலுடனும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தான் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நடிகை தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்டோர் நாளை விசாரணைக்கு ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
