'சுஷாந்த் சிங்' வழக்கு: 'ஒரு வழியாக ஆஜரான ரியா!'.. போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு!.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகார் அளித்தார்.

தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு உள்ளிட்ட 3 முகமைகள் விசாரித்து வருகின்றன. இதனிடையே போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது, அதனை சுஷாந்த் சிங் மீது பிரயோகப்படுத்தியது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அந்த போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கு இருந்த தொடர்பு தெரியவந்ததை அடுத்து, ரியாவிடம் 3 நாட்களாக விசாரணை நடத்திய பின்னர் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மும்பையில் நேற்று ரியாவை கைது செய்தனர். அதன்பின்னர் நேற்று மாலை 7.30 மணிக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரியா சக்ரபோர்த்தி விசாரணை செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகை ரியா அளித்த ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், செப்டம்பர் 22 வரை, 14 நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
