“பயங்கரவாதிகள் இதை பயன்படுத்துறாங்க!.. அதனால இந்திய முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதை”.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 11, 2020 10:34 AM

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது குறித்த, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Raghuraj Singh links Burqa with terror goes controversial

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக அலிகார் நகரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில அமைச்சர் ரகுராஜ் சிங்,  இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின் அங்கு புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், அரபு நாடுகளின் மரபான புர்கா இந்திய கலாச்சாரத்தைச் சார்ந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசியவர்,  ஷஹீன் பாக்கிலும் புர்கா தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தியாவைப் பொருத்தவரை நாட்டுக்குள் நுழைவதற்கு பயங்கரவாதிகள் புர்காவை பயன்படுத்துவதாகவும், எனவே இந்திய முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இவரது பேச்சு கொள்கைக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டு இருப்பதால் பாஜக தரப்பில் இருந்து இவரின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags : #BURKA #RAGHURAJ SINGH