‘முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதை தேசப் பாதுகாப்பு கருதி..’ இலங்கை அரசு புதிய உத்தரவு!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Apr 29, 2019 05:19 PM
இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், குண்டுவெடிப்புடன் தொடர்புடைய 120க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த இந்த கோரமான தற்கொலைப் படை தாக்குதலில் இதுவரை 253 பேர் பலியாகிள்ளதாகவும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு பல்வேறு அவசர கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இன்றுமுதல் முகத்தை மறைக்கும் வகையில் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்கா போன்றவை அணிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன தடை விதித்துள்ளார்.
இலங்கையில் இன்னும் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தீவு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசர கால சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதன் மூலம், பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாமென, அகில இலங்கை ஜம்இய்யத்துல் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது. மத ஆனால் நன்னம்பிக்கைக்கு எதிரான நடவடிக்கை என இதற்கு பல்வேறு முஸ்லீம் சமூகத்தினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், பாதுகாப்பு கருதி மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எந்த ஒரு மதத்தினருக்கும் அவர்களது நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.