"சீறிப்பாயும் ரபேல் விமானத்தின்... முதல் பெண் FIGHTER PILOT!" - யார் இந்த சிங்கப்பெண்?
முகப்பு > செய்திகள் > இந்தியாவாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விமானம் ஓட்டவேண்டும் என சிறு வயதில் முதலே கனவுடன் இருந்து வந்ததாக தெரிவித்துள்ள ஷிவாங்கி வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்துள்ளார். பின்னர் தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றிய இவர், அதன்பிறகு 2016ஆம் ஆண்டு இந்திய விமானப் படை அகாடமியில் சேர்ந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருந்த பெண்கள் குழுவில் இடம் பெற்று இருந்த ஷிவாங்கி சிங் ஃபிளைட் லெப்டினன்ட் ஆக உள்ளார். தற்போது இவருக்கு ரபேல் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அம்பாலாவில் இருக்கும் கோல்டன் ஏரோ என்ற 17வது படையில் சேர இருக்கிறார்.
இதன்மூலம் ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை ஷிவாங்கி சிங் பெற்றுள்ளார். மேலும் 2017ஆம் ஆண்டிலிருந்து மிக் 21 போர் விமானத்தை இயக்கி வரும் ஷிவாங்கி சிங், ராஜஸ்தானில் விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உடன் செயல்பட்டு வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(Photo credit : Amar Ujala)

மற்ற செய்திகள்
