அன்னைக்கி ரெயில்வே ஸ்டேஷன்'ல பிச்சை எடுக்கும் நிலைமை.. இன்னைக்கி அவங்க லெவலே வேற.. திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்
முகப்பு > செய்திகள் > இந்தியாபாட்னா : பீகார் மாநிலம், பாட்னா பகுதியில் இளம் பெண் ஒருவர், சாதித்துள்ள காரியம், பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வேலைக்காக இளைஞர் செய்த வேறலெவல் ஐடியா.. வியந்துபோய் கூப்ட்டு வேலை கொடுத்த கம்பெனி..!
பாட்னா ரெயில் நிலையம் அருகே, சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை தான் ஜோதி.
அனாதையாக இருந்த ஜோதியை, ரெயில் நிலையத்தில் அருகே இருந்த பிச்சைக்கார தம்பதியினர், சிறு வயதில் இருந்தே வளர்த்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக, தன்னுடைய சிறு வயதில் இருந்தே, வளர்ப்பு பெற்றோர்களைப் போல, பிச்சை எடுத்து வந்துள்ளார். இதில், ஜோதிக்கு சொற்ப வருமானம் வருவதாய் தோன்றவே, இன்னொரு பக்கம் குப்பைகளை அள்ளிப் போடவும் ஆரம்பித்துள்ளார்.
கல்வி தான் ஒரே வழி
தனக்கு யார் என்று கூட தெரியாத பெற்றோர்களால், இப்படி ஒரு நிலை தனக்கு வந்தது என உணர்ந்த ஜோதி, சூழ்நிலையை மாற்றிக் கொண்டு, கல்வி கற்று முன்னேற வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளார். பிச்சை எடுத்து தொழில் செய்து வந்தாலும், கல்வி கற்க வேண்டும் என்பது மட்டும், ஒரு பக்கம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.
கல்வி தேர்ச்சி
இந்நிலையில் தான், பாட்னா மாவட்ட நிர்வாகம் மற்றும் அறக்கட்டளை ஒன்றின் உதவியுடன் ஜோதிக்கு படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில், கல்வி கிடைக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் ஏழைக் குழந்தைகளுக்கு, பகுதி நேர அல்ல முழு நேர கல்வி அளித்து வந்துள்ளனர். அவர்களின் உதவியுடன், மெட்ரிக்குலேஷன் தேர்வில், ஜோதி வெற்றியும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, உபேந்திரா மஹாரதி நிறுவனத்தில், ஓவியமும் கற்று வருகிறார் ஜோதி.
கஃபேவை நடத்தும் ஜோதி
தன்னுடைய கல்வியின் உதவியுடன், 19 வயதே ஆகும் ஜோதிக்கு, ஒரு நிறுவனத்தின் கஃபேவை நடத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பகலில் கஃபேவை நடத்தும் ஜோதி, மற்ற நேரங்களில், கல்வியிலும் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு பாட்னா ரெயில் நிலையங்களில், பிச்சை எடுத்து வந்த ஜோதி, இன்று தனது கல்வியில் வெற்றி பெற்று, கஃபே ஒன்றையும் நடத்தி வருகிறார்.
முன்னுதாரணம்
அது மட்டுமில்லாமல், வாடகை வீடு ஒன்றில், தன்னுடைய சொந்த பணத்தில் வசித்தும் வருகிறார் ஜோதி. மார்க்கெட்டிங் ஃபீல்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் ஜோதி, இன்னும் படிப்பைத் தொடர்ந்து, பலருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கிறார்.
நம் முன்னால், சிறிய தடை வந்து நின்றாலே, மனமுடைந்து, அடுத்து வாழ்வில் என்ன செய்வது என்று கூட தெரியாமல், சிக்கித் தவிக்கிறோம். ஆனால், தன் முன்பு விரிந்து கிடந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து, கல்வி என்னும் ஆயுதத்தால், இன்று ஒரு படி முன்னேறி, அதில் வெற்றியும் கண்டுள்ளார் இளம்பெண் ஜோதி.

மற்ற செய்திகள்
